a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

தேர்தலை காரணம் காட்டி மீள்குடியேற்றம் தாமதிக்கப்படாது எஞ்சிய 70,000 பேரும் விரைவில் மீள் குடியேற்றம்

பாராளுமன்றத் தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதிக்கப்படமாட்டாது எனவும், எஞ்சியுள்ள சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களையும் துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்தது. போர்ச் சூழல் காரணமாக சுமார் 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீள்குடியே ற்றப்பட்டுள்ளனர். கடந்த இரு மாதங்களாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமானதோடு மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். இந்த மாதத்திலும் பெரும்பாலானவர்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதோடு, அவர்கள் வசித்த இடங்களில் உள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்க ப்படுவதாகவும் அந்த உயரதிகாரி கூறினார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவ டைந்து வருவதோடு, ஏனைய பகுதிகளிலும் மிதிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. (மேலும்) 02.03.10

__________________________________________________________________________________________________

நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடுவோம்: ராஜபட்ச

கொழும்பு, மார்ச் 1:  வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்களது கூட்டணி எளிதாக வெற்றி வாகை சூடி நிலையான அரசை அமைக்கும் என்றார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச. இலங்கையில் ஏப்ரல் 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கொழும்பில் திங்கள்கிழமை தனது கூட்டணி கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில் ராஜபட்ச இவ்விதம் தெரிவித்ததாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.மேலும் அவர் கூறியதாவது: இலங்கையில் நமது கூட்டணி மீது மக்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர். நம்மால்தான் அவர்களுக்கு நல்லாட்சியை வழங்க முடியும் என்று உறுதியாக நினைக்கிறார்கள். இதை, 1994-ல் இருந்து தொடர்ந்து நமக்கு ஆதரவு அளித்து ஆட்சிப்பீடத்தில் அமரவைத்துள்ளதன் மூலம் அறியலாம். நாமும் அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்கிறோம். நாட்டில் எந்தளவுக்கு ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியுமோ அந்தளவுக்கு நிலைநிறுத்தியுள்ளோம். ஜனநாயக மரபை மீறி நாம் எப்போதும் நடந்து கொண்டதில்லை. ஜனநாயகம் தவிர்த்து எதன் மீதும் நாம் நம்பிக்கை கொண்டதில்லை.  (மேலும்) 02.03.10

__________________________________________________________________________________________________

கிளிநொச்சி, முல்லைத்தீவு நீதிமன்றங்கள் வவுனியாவில் இயங்க ஆரம்பித்தன

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங் களுக்கான நீதிமன்றங்கள் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளன. இரு இடங்களிலும் உள்ள நீதிமன்றங் களின் கட்டடங்கள் சேதமடைந்துள்ள தால், தற்காலிக ஏற்பாடாக, வவுனியாவில் இவ் இரு நீதிமன்றங்களையும் மூன்று வாரங்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக வவுனியா நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ் ராஜா தலைமையில் குழு ஒன்று நேற்று கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டது. கிளிநொச்சி மாவட்ட நீதிபதி எஸ்.சிவ குமார், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.ரியல் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரும் இக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். சேதமடைந்துள்ள இரு நீதிமன்றக் கட்டடங்களையும் புனரமைப்பது, தளபாட வசதிகளை ஏற்படுத்துவது ஆகிய விட யங்கள் தொடர்பாக இக் குழுவினர் ஆராய்ந்தனர்.     

__________________________________________________________________________________________________

வடக்கு மீள்குடியமர்வு, கண்ணிவெடியகற்றல்; சீனா ரூபா 50 மில். உபகரணங்கள் அன்பளிப்பு

வடக்கில் கண்ணிவெடியகற்றுதல் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் 50 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள், கூடாரங்கள் மற்றும் உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. நேற்றுக் கொழு ம்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் சீனத் தூதுவர் யென் சிங் ருவென் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் இந்த இயந்திர உபகரணங்களை உத்தி யோகபூர்வமாகக் கையளித்தார். அத்துடன் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் 6252 கூடாரங்களையும் 34 கனரக இயந்திரங்களையும் அதனோடு சம்பந்த ப்பட்ட உபகரணங்களையும் நேற்று வழங்கியதுடன் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அதனையும் சீனத் தூதுவரிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இவற்றை சீனக்குடியரசு மக்கள் இலங்கையில் மீள் குடியேற்றப்படும் மக்களுக்காக அன்பளிப்புச் செய்துள்ளனர்.

__________________________________________________________________________________________________

த.ம.வி.பு.க. உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கம் : முதலமைச்சர் பொலிஸ் மா அதிபருக்குக் கடிதம்

  கிழக்கு மாகாண சபையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களதும் பாதுகாப்புகள் நீக்கப்பட்டுள்ளமை குறித்து விளக்கமளிக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பொலிஸ் மா அதிபருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் இராணுவ பாதுகாப்புகள் நீக்கப்பட்ட ஓரிரு தினங்களிலேயே இந்தப் பாதுகாப்பும் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கிழக்கு மாகாண சபையின் ஏனைய உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரம் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். (மேலும்) 02.03.10

__________________________________________________________________________________________________

பிரித்தானிய அரசுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மிலி பாண்ட் கலந்து கொண்டமையையும், பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் அந்த அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியதையும் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது. பிரித்தானிய தூதரகத்தின் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அரச ஆதரவுக் கட்சியாகிய தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. அந்த முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஸங்களை எழுப்பினார்கள். இங்கு செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வேறொரு நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு பிரித்தானியாவின் தலைவர்கள் உதவி செய்வதைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகக் கூறினார்.

 

தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை தற்போதைய நிலையில் விடுதலை செய்ய முடியாது -அரசாங்கம்

 தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை தற்போதைய நிலையில் விடுதலை செய்ய முடியாது என சிறிலங்கா படையைச் சேர்ந்த பிரிகேடியர் சுகந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். போராளிகளை விடுதலை செய்யும் படி சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அரசின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. தற்போது 10 732 பேர் தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ரணசிங்க இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்பே விடுவிக்கப்படுவர் என்றும் இதற்கு பல ஆண்டுகள் செல்லலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

__________________________________________________________________________________________________

துவரங்குறிச்சியிலிருந்து வாஷின்டன் வரை....  

“என் வகுப்புத் தோழியின் சொந்தங்கள் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்தார்கள். தோழி மார்டனாக ட்ரெஸ் பண்ணுவாள். பாப் வெட்டியிருப்பாள், ஆங்கிலம் பேசுவாள். அவளைப் பார்த்து, ‘நானும் அமெரிக்கா போக வேண்டும், இரும்புக்கை மாயாவியின் உலகத்தைப் பார்க்க வேண்டும்’ என்று முடிவு செய்தேன் ஆனால், ‘இந்த வாழ்க்கை நமக்கு சரிப்பட்டு வராது’ என்பது பதினோரு வயதிலேயே தெரிந்துவிட்டது”. துவரங்குறிச்சி சல்மா இன்று அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் “சர்வதேச பெண் அரசியல் தலைவர்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் , மாநாட்டில் கலந்து கொள்ளும் கவிஞர் சல்மா யார்? "எல்லா அறிதல்களுடன் விரிகிறது என் யோனி" - என்று படிக்கின்ற யாரையும் ஒரு கணம் அதிர வைக்கும் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் சல்மா. ஒரு பெண் எழுத்தாளர் இதைமட்டுமே எழுதவேண்டும் என்று இருந்த எழுதப்படாத விதிகளை கதை,கவிதை, நாவல் என எல்லா தளங்களிலுமே உடைத்து எறிந்தவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண் கவிஞர் சல்மா. (மேலும்) 01.03.10

__________________________________________________________________________________________________

Tamils' spokesman 'Alex' jumps ship

JAKARTA: Sanjeev ''Alex'' Kuhendrarajah, who gained fame as spokesman for 254 Sir Lankan asylum seekers who refused to leave their boat after being intercepted on their way to Australia, has disappeared. A fellow Tamil said that Mr Kuhendrarajah left the squalid, wooden vessel that has been home to the asylum seekers for more than five months early yesterday morning. ''He was there last night but, when we woke up in the morning, he wasn't in his place,'' said Nimal, an asylum seeker on the boat. ''We don't know how or why he left.'' With his Canadian-accented English and passionate advocacy, Mr Kuhendrarajah became a fixture in the Australian media as the saga at the port of Merak, in north-western Java, unfolded. After a week at sea, the Sri Lankans' boat was intercepted by the Indonesian Navy in October following the intervention of the Australian Prime Minister, Kevin Rudd. (Read) 02.03.10

__________________________________________________________________________________________________

சிறையில் மே தினம் கொண்டாடிய வீராங்கனை

-பாப்பா உமாநாத்

1939ல் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவாக்கப்பட்ட போது அதில் ஜான கியம்மாள் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார். 1939ல் பொன்மலையில் யுத்த எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய அவரை ஆங்கில அரசு கைது செய்து 6 மாதம் சிறையிலடைத்தது. யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக சிறைப்பட்ட பெண் அரசியல் வாதி அம்மாதான். கம்யூனிஸ்ட் இயக்கங்க ளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒரு தியாகச் சீலராகத் திகழ்ந்தார். பலமுறை சிறை சென்றார். பெண் தொழிலாளர்களுக்கு அரசியல் உணர்வு ஊட்டி, அவர்களை அரசியல் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்வதில் ஜானகியம்மாளுக்குப் பெரும் பங்கு உண்டு. கட்சியின் முடிவுப்படி 1944ம் ஆண்டு கடைசியிலிருந்து மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கும் வேலையில் அம்மா ஈடுபடத் துவங்கினார். சுதந்திரம் அடைந்த பின் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது கடும் அடக்குமுறை ஏவப்பட்டது. ஜானகி அம்மா மற்ற தலைவர்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். பின் 1951ல் விடுதலையானார். 1962ல் இந்திய-சீன எல்லைப் பிரச்சனையில், அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையின் மூலமாக பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண வேண்டுமென்ற கட்சியின் நிலைபாடு காரணமாக, நாம் சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற பொய்ப்பிரச்சாரத்தை அரசு கட்டவிழ்த்துவிட்டு, நமது கட்சியின் தலைவர்களையும், தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது. (மேலும்) 01.03.10

__________________________________________________________________________________________________

புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பதில்லை

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ

ில நாடுகளை ஏமாற்றி அவர்களது ஆதரவைப் பெறுவதற்காக விடுதலைப் புலிகள் தங்களைச் சட்டபூர்வமான அமைப்பாக மாற்ற முயல்கின்றனர். இராணுவ ரீதியில் தங்களால் செய்ய முடியாது போனதை இந்த அரசுகளின் துணையுடன் வேறு வழிகளில் செய்வதற்கு அவர்கள் முயலக்கூடும். இதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசை ஏற்படுத்த அவர்கள் முயல்கின்றனர். எனினும், புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய இலங்கைக் குள் தேசிய நல்லிணக்கத்தையே விரும்பு கின்றனர். மிகப் பெரும் எண்ணிக்கையான புலம் பெயர்ந்த தமிழர்கள் உள்ள போதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் மிதவாதிகள். ஈழக்  கோரிக்கையை அவர்கள் ஆதரிப்பதில்லை. அநேகமானவர்கள்  இலங் கைக்குத் திரும்பிவந்து அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகின்றனர். விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரான கே.பியை நீதிமன்றத்தில் நிறுத்தும் எண்ணம் எதுவுமில்லை.எனினும், அவர் வழங்கும் தகவல்கள் அரசின் புலனாய்வுத் துறையினருக்கு மிகப் பெறுமதியானவையாகக் காணப்படுகின்றன. அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்து வது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லை.விடுதலைப் புலிகளின் சர்வதேச நட டிக்கைக்குப் பொறுப்பாக செயற்பட்டவர் என்ற வகையில் அவரிடமிருந்து இன்னமும் தகவல்களைப் பெற முயல்கிறோம்.  எனக் குறிப்பிட்டுள்ளார். (மேலும்) 01.03.10

__________________________________________________________________________________________________

தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்து- வடக்கு,கிழக்கில் 31 ஆசனங்களுக்கு 1867 பேர் களத்தில்

எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், இலங்கையின் தேர்தல் வரலாற்றில் அதிகளவு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக அமைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுவே மாவட்டம் ஒன்றில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கிய தேர்தலாகும். இங்கு 22 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் மோதுகின்றன. அம்பாறை மாவட்டம் அதிகளவு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மோதும் மாவட்டமாக சாதனை படைத்துள்ளது. இங்கு 66 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் மொத்தம் 660 வேட்பாளர்கள் ஏழு ஆசனங்களுக்காகப் போட்டியிடுகின்றனர். அதே வேளை இந்தப் பொதுத் தேர்தலில் இலங்கை முழுவதும் 7265 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும், 298 சுயேச்சைக் குழுக்கள் சார்பிலும் போட்டியில் நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் 196 பேர் மட்டுமே தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.  (மேலும்) 01.03.10

__________________________________________________________________________________________________

ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர்!

இரா. செழியன்

thiyaதமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா மன்னராக, முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு நிறைவு விழா 2010 மார்ச் முதல் நாள் (இன்று) தொடங்குகிறது. மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம். ர்தந்தைக்கு இது பிடிக்கவில்லை. தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியபடி இருந்தார். தொல்லை தாங்காமல் திடீரென்று மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கே தேடியும் தாயும் தந்தையும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்கு அவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்ததாம். (மேலும்) 01.03.10

__________________________________________________________________________________________________

அமைதிச் சூழலில் தலைதூக்கும் விஷமிகள்

வட பகுதியில் முப்பது வருட காலத்தின் பின்னர் அமைதியும் சுமுகமும் நிறைந்த நிம்மதியான சூழல் தற்போது நிலவுகிறது. குண்டுச் சத்தங்களோ துப்பாக்கி வேட்டுச் சத்தங்களோ இப்போதெல்லாம் அங்கு கிடையாது. இரவு நேரத்திலும் கூட மக்கள் நிம்மதியாக எங்கும் சென்று வரக்கூடிய சூழ்நிலை யாழ் குடாநாட்டில் நிலவி வருகிறது. யுத்தம் முற்றாக ஓய்ந்த பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை இது. வட பகுதி மக்கள் மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் எதுவித தடையுமின்றி தாராளமாக நாட்டின் தென் பகுதிக்கு சென்று வருகின்றனர். முப்பது வருட காலமாக யாழ் குடாநாட்டு க்குள் சிறைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு தற்போது சுதந்திரம் கிடைத்தது போன்றதொரு மனோ நிலை ஏற்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டுக்கும் தென் பகுதிக்கும் இடையில் இரவு பகலாக பஸ்கள் ஓடுகின்றன. யாழ் குடாநாட்டிலுள்ள எவரும் தென்பகுதியில் தமது தேவையை நிறைவேற்றி வருவதற்காக எவ்வேளையிலும் கட்டுப்பாடு எதுவுமின்றி புறப்பட்டுச் செல்லலாம். அதே சமயம் நாட்டின் தென் பகுதியை இதுவரை கண்ணால் பார்த்திருக்காத இளவயதினர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் புறப்படுகின்றனர். (மேலும்) 01.03.10

__________________________________________________________________________________________________

உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கான கண்டனக் கூட்டம்:- அலெக்ஸ் இரவி.

“ உனது கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அந்தக் கருத்தைசொல்லுவதற்கான உனது உரிமைக்காய் நான் உயிரைக் கொடுத்தும் போராடத் தயார் “ - பிரஞ்சு அறிஞர் வால்ட்டயர்

இன்று சனிக்கிழமை Canada, Scarbourgh Civic Centerல் தேடகம் அமைப்பினரால் (Tamil Resource Centre) கனடாவில் இலவசமாக வெளியிடப்படும் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை  கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை  வலியுறுத்தியும்  தேடகத்தினால்  கண்டன கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு நடந்தது. இதில் பலர் கலந்து kondirunthaalum குறிப்பாக  oodakavillaalarkal என்று ஒரு சிலரே கலந்து கொண்டதுடன், உதயன் வாசகர்கள் என்றும் கலந்து கொண்டவர்களைக் காணக்கூடியதாக இல்லை. குறிப்பாக தேடக அமைப்பை சேர்ந்தவர்களுடன், திரு கனகமனோகரன் அவர்கள், திரு. கனகசபாபதி, அவர்கள், திரு. கந்தவனம் அவர்கள் முக்கியமாக கலந்து கொண்டனர். (மேலும்) 01.03.10

__________________________________________________________________________________________________

எதிர்க்கட்சிகளின் பிளவு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வழிவகுக்கலாம்- அரசியல் விமசகர்கள் கருத்து

ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த வெல்வது இலகுவானதல்ல என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதேவேளை, இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் அதிகளவு சுயேச்சை குழுக்கள் போட்டியிடுவதன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தமக்கு சாதகமற்ற பகுதிகளில் அதிகளவில் சுயேச்சைக் குழுக்களை போட்டியிட வைத்து எதிரணியின் வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் அங்கு வெற்றியினை பெறுவதற்கு அரசாங்கம் முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளுக்குள் தற்போது பிளவுகள் தோன்றியுள்ளன. பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்தப் பிரிவினை மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுகூலங்களை எற்படுத்தலாம். அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்க்கிறார். (மேலும்) 01.03.10

__________________________________________________________________________________________________

Joining mainstream SLFP will help address Muslim issues better – Ferial Ashraff

Minister of Development and Construction of the East & Rural Housing, Ferial Ashraff made headlines when she crossed over to the SLFP recently. A move some viewed as a controversy in the backdrop of the legacy her husband, the Late Ashraff left behind. Here, the minister talks about the rationale behind her move and her views on participating in mainstream politics to The Nation.   (Read) 01.03.2010

__________________________________________________________________________________________________

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தை திருத்த அரசு முடிவு

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் தொடர்பாக தற்போது உள்ள சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.  அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயவும் அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவுமே இவ்வாறு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் மேலும் கூறினார். இவ்வாறான சட்டத் திருத்தங்களை முன்மொழிவதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு அதன் சிபாரிசுகளை ஏற்கனவே கையளித்து விட்டதாகவும் இது பற்றி விரைவில் கலந்துரையாடப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையடுத்து அவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் மேலும் கூறினார். குறிப்பிட்ட சிபாரிசுகள் சட்ட மாஅதிபருக்கு அவரது ஆலோசனையை பொறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

__________________________________________________________________________________________________

அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய

 இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதிபாதுகாப்புத் தேவைப்படுவோருக்கு மட்டுமே இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் தவிர்ந்த மற்றைய அரசியல் தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் கோத்தபாய தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பான கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த கோத்தபாய, பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்படவில்லையென்றும் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய முடிவின்படி அவரது இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இராணுவப் பிரிவுகளுக்கும் அரசியலுக்கும் இடைவெளி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இது அமையும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

__________________________________________________________________________________________________

"கையில் இருக்கிற புறாவைப் பறக்கவிட்டு வேறு புறா தேடிப் பிடிப்பது போலத்தான் தமிழ் தேசிய கூட்டணியின் செயற்பாடுகள் இருக்கின்றன"

- மட்டக்களப்பு மாவட்ட ஐ. ம. சு. மு. வேட்பாளர் தங்கேஸ்வரி மனந்திறக்கிறார்

கேள்வி : இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கொள்கை என்ன?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - தமிழர் விடுதலைப் புலிகள் இரண்டும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு, தேசியம் என்ற இரண்டையுமே முன்வைத்து முதன்மைப்படுத்தி வந்துள்ளன. அது புலிகள் பலமாக இருந்தபோது வைத்த கொள்கை. அதாவது எமக்குரிய சுயநிர்ணய உரிமை கிடைக்குமானால் அபிவிருத்தி என்பது பெரிய விடயமல்ல. ஓரிரு வருடத்தில் அபிவிருத்தி முடிந்துவிடும் என்று. அது சரி. அந்த காலகட்டத்தில் இப்போ எமக்கென்று இருந்த பலம் போய் பலவீனமான கட்டத்தில் ஆட்சியில் இருப்பவர்களுடன் பேசித்தான் தீர்வு காண வேண்டும். அதேநேரம் மக்களுடைய தேவைகள் பல இருக்கின்றன. 30 வருடகாலமாக சீரழிக்கப்பட்டுக்கொண்டேபோய் இறுதிக்கட்ட சீரழிவும் ஏற்பட்ட பின்பு - இன்னும் மக்கள் மர நிழலில் வாழ முடியாது. அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - அப்போதுதான் காலவோட்டத்தில் ஏனையோருடன் சமமாக எதிர் நிற்க முடியும். அதை எமது தலைவர்கள் ஏன் உணர்கிறார்கள் இல்லை என்பதுதான் புதிராக இருக்கிறது. (மேலும்) 28.02.10

__________________________________________________________________________________________________

இனப்பிரச்சினையின் தீர்வுக்கு கொள்கை எதுவும் இல்லாமலே கூட்டமைப்பு தேர்தலில் போட்டி

தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோரிய தலைவர்கள் இனப் பிரச்சினையை வைத்தே அரசியலில் வாழ்ந்தார்கள். இவர்களின் தவறான முடிவுகள் காரணமாக இனப் பிரச்சினை காலத்துக்குக் காலம் புதிய பரிமாணம் பெற்று வளர்ந்ததேயொழியத் தீர்வை நோக்கி நகரவில்லை. பாராளுமன்றத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. கட்சிகளின் ‘பிரசார போர்’ இனி உச்ச கட்டத்தை அடையப் போகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எல்லா மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றது. சென்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தத் தடவை வேட்பாளர்களாக இல்லை. உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவை சேனாதிராசாவையும் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் தவிர மற்றவர்கள் புதுமுகங்கள். அ. விநாயகமூர்த்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்தான். ஆனால் சென்ற தேர்தலில் அவர் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவில்லை. வன்னியில் போட்டியிட்டுத் தோற்றவர். கூட்டமைப்புப் பட்டியலில் சேர்க்கப்படாத முன்னாள் பாராளுமன்ற உறு ப்பினர்கள் தாங்கள் பழிவாங்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென்ற முடிவைக் கட்சிக்குள் எதிர்த்தவர்களையும் பொன்சேகாவுக்காகப் பிரசாரம் செய்யாதவர்களையுமே கூட்டமைப்புத் தலைமை ஓரங்கட்டியிருப்பதாகப் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றார்கள். (மேலும்) 28.02.10

__________________________________________________________________________________________________

“Some Western Powers Wanted A Regime Change In Sri Lanka”

The aftermath of the stunning victory of Mahinda Rajapakse in the Sri Lanka presidential election over joint opposition candidate Sarath Fonseka is a bruising controversy. World attention is now focussed on the recent detention of Gen. Fonseca, the former Army Commander and once-wounded war hero who led the action against the LTTE. Except for general, broad statements hinting at a coup attempt and a broad conspiracy, the Sri Lankan government has chosen to remain silent about the real reasons behind Fonseka’s confinement and impending trial. In an exclusive interview, however, with India’s leading weekly magazine, Tehelka, Sri Lanka Defence Secretary, Gotabhaya Rajapakse – a former combat officer, the real boss of the armed forces and also the President’s powerful brother – made some startling revelations. He spoke to author and renowned Delhi-based senior journalist Inderjit Badhwar. Delhi-based senior journalist Inderjit Badhwar. (Read) 28.02.10

__________________________________________________________________________________________________

பொதுத்தேர்தல் 2010

25 கட்சிகள், 312 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7625 பேர் களத்தில் பொதுத் தேர்தலொன்றில் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதற் தடவை.

பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும் 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூ டாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் நேற்று நண்பகலுடன் நிறை வடைந்தன. ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பிற்பகல் 1.30 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முறையாகப் பூர்த்திசெய்யப்படாததால், கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்பு மனுக்களும் 35 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வன்னி மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. அந்தக் கட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வேட்பாளரின் பெயர் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் பட்டியலிலும் இடம்பெற் றிருந்ததால் அந்த இரண்டு கட்சிகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. (மேலும்) 27.02.10

__________________________________________________________________________________________________

யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி

 ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்று யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார். வட மாகாணத்தில் மாத்திரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை நாடாளுமன்றத் தோ்தலில் தமது கட்சி வீணைச்சின்னத்திலேயே போட்டியிடும் எனத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெற்றிலைச் சின்னத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

__________________________________________________________________________________________________

சிறுபான்மைத் தமிழர் மகாசபையினது சுயேட்சை வேட்பாளர்கள்

helicopter-100x94கெலிகப்டர்  சின்னத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில்  சிறுபான்மைத் தமிழர் மகாசபை சுயேட்சையாக போட்டியிடுகின்றது.  கீழ் காணும் பன்னிரெண்டு  வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும்  யாழ் மேலாதிக்கத்தின்  அரசியல் அதிகார நலன்களை  பாதுகாத்துக் கொள்ளும் ஒர் கருவியாகவே   தலித் சமூகமானது உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது.   போருக்கு முன் குடிமைகளாகவும், அடிமைகளாகவும், ஸ. போருக்குப்பின் மாவீரர்களாகவும், தியாகிகளாகவும்  ஸ என உபயோகப்படுத்தப்பட்ட சமூகம். “யாழ்ப்பாண நிலையத்திலிருந்து பளை போய்ச்சேரும் வரை ஆங்காங்கே நின்று கற்களை வீசி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக திட்டம். அதற்கு மேலும் பின்பு றெயில் ஓடுமாயின் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து அமுல் நடத்துவதாகவும் முடிவாயிற்று. (மேலும்) 27.02.10

__________________________________________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) வேட்புமனுத் தாக்கல், மட்டக்களப்பில் புளொட் வேட்புமனுத் தாக்கல்-

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் இன்றையதினம் முற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை வேட்பாளரான ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் திருநாவுக்கரசு சிறீதரன் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். திருநாவுக்கரசு சிறீதரன், கந்தையா சிவராஜா, நாகமணி நீக்கிளாஸ் அரியரட்ணம், காளிகுட்டி ஜெயகுமாரன், வசந்தநாதன் சிவநாதன், ராஜேந்திரன் செல்வராஜா, கைலாயபதி பகிரதன், துரைராஜா மகாலிங்கம், ராஜரட்ணம் கோணேஸ்வரன், தில்லைநாதன் தங்கவேலு, அரியகுட்டி யோகன், சின்னத்தம்பி தங்கராஜா ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) கட்சியின் சின்னமான மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கென புளொட்; சார்பில் நங்கூரம் சின்னத்தில் அதன் தலைமை வேட்பாளரான பெனடிக்ட் தனபாலசிங்கம் இன்று முற்பகல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பெனடிக்ட் தனபாலசிங்கம், மயில்வாகனம் நிஸ்கானந்தராஜா, பொன்னம்பலம் செல்லத்துரை, நல்லதம்பி சண்முகநாதன், நாகமணி சிவராஜா, செல்லத்துரை கணேசலிங்கம், முருகேசு கிருபானந்தன், செல்லத்துரை தங்கராஜா ஆகியோர் புளொட்; சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

__________________________________________________________________________________________________

யாழ்ப்பாணத் தேர்தல் களத்தில் 15 கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களும் போட்டி

இன்று நண்பகல் 12 மணியுடன் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிவுக்கு வந்த நிலையில் யாழ்ப்பாணத் தேர்தல் களத்தில் 15 கட்சிகளும், 12சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளன. ஒருகட்சியினதும், 3சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கபட்டுள்ளது. ஈ.பி.டி.பி கட்சி வெற்றிலைச் சின்னத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரிலும் வேட்புமனுத் தாக்கல் செய்தது. யாழ்ப்பாணத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த கட்சிகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (வள்ளம்), இலங்கை தமிழரசுக் கட்சி (வீடு), சோ~லிச சமத்துவக் கட்சி (கத்தரிக்கோல்), ஜக்கி தேசியக் கட்சி (யானை), ஜனநாயக தேசயக் கூட்டணி, ஜனசென பெரமுன(உலக்கை), ஜக்கிய சோசனச கட்சி, எல்லோரும் மக்கள் எல்லோரும் மன்னர் கட்சி (உண்டியல்), ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி(வெற்றிலை), பத்மநாபாஃ ஈழமக்கள் புரட்சிகர முன்னணி(மெழுகுதிரி), தமிழர் விடுதலைக் கூட்டணி(உதயசூரியன்), ஜனநாயக ஜக்கிய முன்னணி( இரட்டை இலை), அகில இலங்கைஃதமிழ் காங்கிரஸ்(மிதிவண்டி), இடதுசாரி விடுதலை முன்னணி(குடை), ஈழவர் ஜனநாயக முன்னணி(கலப்பை), ஸ்ரீலங்கா தேசிய முன்னணி ஆகியன வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன. (மேலும்) 27.02.10

__________________________________________________________________________________________________

தோழர் உ.ரா.வரதராசனின் துயர மரணம்

தோழர் உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந் திருப்பது, ஒட்டுமொத்த கட்சியையும் விரிந்து பரந்த தொழிற்சங்கத்தின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டபிள்யுஆர்.வி. என்று பிரபலமாக அறியப்பட்ட, அவர் ஒரு ஆற்றல்மிக்க தொழிற் சங்கத் தலைவர். சிஐடியு அகில இந்திய செயலாளர்களில் ஒருவர். பிப்ரவரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் வரையிலும் அவர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தமிழக சட்டப்பேரவையில் ஒரு முறை உறுப்பினராக பணியாற்றியுள்ள அவர், மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். பிப்ரவரியில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் உ.ரா.வரத ராசன் மீது கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியின் தேர்வு செய்யப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவரை நீக்குவது என்ற முடிவின் அடிப்படையில் கட்சியின் மத்தியக்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்குப் பிறகு உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிப்ரவரி 11ந்தேதி இரவு இது நடந்திருக்கலாம். (மேலும்) 27.02.10

__________________________________________________________________________________________________

கண்டன கூட்டம்

உதயன் பத்திரிகை  அலுவலகம் தாக்கப்பட்டதை  கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை  வலியுறுத்தியும்  தேடகத்தினால்  கண்டன கூட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது

காலம்      27-02-2010
இடம்      ஸ்காபுரோ சிவிக் சென்டர்
நேரம்    3.00 pm-- 6.00pm
அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்
தேடகம்

__________________________________________________________________________________________________

வேட்பு மனுக்களை ஏற்கும் பணி இன்று நண்பகலுடன் நிறைவு: கட்சிகள் கடைசி நேரப் பரபரப்பு: கச்சேரிகளில் கடுமையான பாதுகாப்பு

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் இன்று (26) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றன. இன்றைய தினம் 200 இற்கும் அதிகமான சுயேச்சைக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்து முடிக்கின்றன. இதனால் ஏற்படும் பரபரப்பை சமாளிக்கும் வகையில், மாவட்டச் செயலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானதிலிருந்து நேற்று வரை அரசியல் கட்சிகள் ஒரு சில மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களையே தாக்கல் செய்துள்ளன. அதேநேரம் நேற்று நண்பகல் வரை சுமார் 250 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் சுமார் 50 சுயேச்சைக் குழுக்கள் மாத்திரமே வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சிகளும், கட்டுப்பணம் செலுத்தியுள்ள சுயேச்சைக் குழுக்களும் இன்றைய தினத்திலேயே நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்கின்றன. இதன் பிரகாரம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் இருந்து பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் யாவும் இன்று முடிவடைந்துள்ளன. (மேலும்) 26.02.10

__________________________________________________________________________________________________

மட்டகளப்பில் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியுடன் 06 அரசியல் கட்சிகளும் 08 சுயேச்சைக் குழுக்களும் நியமனப்பத்திரம் தாக்கல்

 2010 ஆம் ஆண்டு பொதுதேர்தலில் போட்டியிட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் 06 அரசியல் கட்சிகளும் 08 சுயற்சைக் குழுக்களும் இன்று நியமணப்பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார். இன்று முன்னாள் தமிழ் கூட்டமைப்பு எம்.பி சிலாஜிலிங்கம் அடங்கலான இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈரோஸ் எல்லா மக்களும் எல்லோரும் மன்னர்கள் என்ற அரசியல் கட்சிகளும் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி அணர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீரலி தலைமையில் வேட்பாளர்கள் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. இக் குழுவிவல் முன்னாள் பிரதியமைச்சர் எஸ். கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி கே.தங்கேஸ்வரி, முன்னாள் ஐ,தே,க எம்.பி அலிசாஹிர் மௌலானா, தொழினுட்ப உத்தியோகத்தர் எஸ். குணசேகரம் பாடசாலை அதிர்பர்களான எல். ரமேஸ், கே.எஸ். வரதன் ஆகியோரும் அடங்குகின்றனர். தமிழர் விடுதலைக்கூட்டணியில் மட்டகளப்பு முன்னாள் எம்.பி. த.கிரு~;பிள்ளையும் போட்டியிடுகின்றனர். நாளை இறுதி தினத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.

__________________________________________________________________________________________________

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சந்தேக நபரை அடையாளம் காண்பித்துள்ளார்

இலங்கையின் - கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சந்தேக நபர்களிலொருவரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார். கடந்த 12 ம் திகதி குறிப்பிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது வழியில் நீராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரால் வழிமறித்து கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக திகிலிவெட்டை இராணுவ முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய்கள் 6 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைதாகி நீதிமன்ற விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர். அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது அன்றைய தினம் குறித்த முகாமில் கடமையிலிருந்த 49 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் கூறுகின்றார் 4 சுற்றுக்களில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் இறுதிச் சுற்றிலேயே சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறும் அவர், குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் தொடர்ந்தும் எதிர்வரும் 3 ம் திகதி வரை நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

__________________________________________________________________________________________________

திருமதி மகேஸ்வரன் தலைமையில் யாழ். மாவட்டத்தில் ஐ.தே.கட்சி

maheswaranஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியி டுவதற்காக ஐ.தே.கட்சி, முன்னாள் எம்.பியான அமரர் மகேஸ்வரனின் துணை வியார் திருமதி விஜயகலாவை முதன்மை வேட்பாளராகக் கொண்டு நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியி டுவதற்காக ஐ.தே.கட்சி, முன்னாள் எம்.பியான அமரர் மகேஸ்வரனின் துணைவியார் திருமதி விஜயகலாவை முதன்மை வேட்பாளராகக் கொண்டு நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தது. நேற்று முற்பகல் 11 மணியளவில் திருமதி மகேஸ்வரன் தலைமையில் சென்ற வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் தேர்தலில் போட்டியிடவுள்ள ஏனைய வேட்பாளர்க ளின் விவரம் வருமாறு: தியாகராஜா துவாரகேஸ்வரன், நடராசா சண்முகவேல், சாம்பசிவம் சத்தியேந் திரன், இராஜரத்தினம் சிறி தாமோதரராஜா, சண்முகசுந்தரம் லவகுமார், சின்னத்துரை குலேந்திரராஜா, பீற்றர்சிங்கம் அந்தோனி ஜூட் ராஜசிங்கம், வல்லி மகேந்திரம், சுந் தரலிங்கம் ஸ்ரீகஜன், மொஹமட் அப்துல் காதர் மொஹமட் முபின், மமுனா லீபங் சொயிப்அமீர். இதேவேளை, யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு உலக சோஷலிஸக் கட்சி, ஸ்ரீலங்கா ஜாதிகபெரமுனை கட்சி ஆகியனவும்  சண்முகதாஸ் மனோகரன் தலைமையிலான சுயேச்சைக்குழுவும் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தன.

__________________________________________________________________________________________________

சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு: இரு வாரங்களில் சட்டமா அதிபரினால் தாக்கல்

ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக எதிர்வரும் இரு வாரங்களில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும். சட்ட மா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண் டவாறு கூறினார். அமைச்சர் மேலும் கூறியதாவது :- குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் வெளிநாட்டு நாணய நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. ஹைக்கொப் நிறுவனத்தினூடாக இராணுவத்திற்கு ஆயுதக் கொள்வனவு செய்யப்பட்டது தொடர்பில் மோசடி செய்தல், மோசடி செய்ய உதவி ஒத்தாசை அளித்தல், மோசடி செய்ய சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது தவிர இராணுவத்திற்குள் பிளவு ஏற்படுத்த முயன்றது தொடர்பாகவும் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவ ர்களை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டமை தொடர்பாகவும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. (மேலும்) 26.02.10

__________________________________________________________________________________________________

துபாய் கொலையாளிகள் போலி பிரெஞ்ச் கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளனர் - பிரான்ஸ்

துபாயில் வைத்து கடந்த மாதம் ஹமாஸ் தலைவரை கொன்ற கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் போலியான பிரஞ்சு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியதாக பிரான்ஸ் உறுதி செய்திருக்கிறது. இந்த கொலையில் சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள், பிரஞ்சு குடிமக்களின் அடையாளங்களை திருடி தங்களின் கடவுச்சீட்டுக்களில் பயன்படுத்தியிருப்பது தெளிவாக தெரியவந்திருப்பதாக, பிரஞ்சு வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது. இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று இதுவரை 26 சந்தேகநபர்களை துபாய் காவல்துறையினர் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி பயணம் செய்திருக்கிறார்கள். இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் பொறுப்பு என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் இதுவரை மறுக்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை.

__________________________________________________________________________________________________

வன்முறையாளர்களுக்கும் பிரிவினையாளர்களுக்கும் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

- ‘துக்ளக்’ ஆசிரிய தலையங்கம்!!

இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல், பொதுவாகத் தமிழகப் பத்திரிகைகளிடம் ஒரு மாதிரியான விரக்தியைத் தோற்றுவித்திருக்கின்றது. ராஜபக்ஸவைத் தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள், (தமிழ்க்கட்சியும், தீவிர சிங்களக் கட்சியும் உட்பட) இணைந்து, முன்னாள் ராணுவத் தளபதியை பொது வேட்பாளராக நிறுத்திய நேரத்திலிருந்து – தமிழகப் பத்திரிகைகளிடையே ஒரு பரபரப்பு உண்டானது. இதுவரை இலங்கைத் தேர்தலைப் பற்றி, இங்கு காணப்படாத உற்சாகம் இப்போது தோன்றியது. விடுதலைப் புலிகளை வீழ்த்தி, அவர்களுடைய தலைவரின் வாழ்வையும் முடித்து வைத்த ஆட்சியின் தலைவர் என்பதால், தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்களுக்கும், ஈழப் பிரச்சாரகர்களுக்கும், தமிழ் ‘இன’ உணர்வாளர்களுக்கும், ராஜபக்ஸ மீது ஒரு விசேட வெறுப்பு உண்டாகிவிட்டது. இவர்களில் பலர் தமிழ்ப் பத்திரிகை உலகத் தொடர்புகள் மிக்கவர்கள், இதனால் இவர்களுடைய வெறுப்பு, பத்திரிகை உலகிற்கும் பரவியது. தமிழ் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்பு, இரு வகைப்பட்டது. ஒன்று – உண்மையிலேயே, ராஜபக்ஸ தமிழர் விரோதி என்று நம்பிய வகை, மற்றொன்று ராஜபக்ஸவை மிக மோசமாகச் சித்தரிப்பது பத்திரிகை வியாபாரத்திற்கு உதவும் என்று நம்பிய வகை. இப்படித் தமிழ் பத்திரிகைகள் பல, ‘ராஜபக்ஸ வீழ்ந்தால், தமிழர்கள் வாழ்வார்கள்’ என்ற கருத்துக்களையும், அதற்கேற்ப செய்திகளையும் வெளியிட, இது சில ஆங்கிலப் பத்திரிகைகளையும் (‘ஹிந்து’ பத்திரிகை அல்ல) பாதித்தது. (மேலும்) 26.02.10

__________________________________________________________________________________________________

யாழ். மாவட்ட தேர்தல் களத்தில் ஜே.வி.பி.

 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் போட்டியிடவென மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேட்பு மனுத் தாக்கல் செய்தது. வேட்பாளர்கள் குழுவின் தலைவர் வீரராஜ் லலித்குமார் தலைமையில் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதனிடம் மனுக்கள் கையளிக்கப்பட்டன என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தது. 

__________________________________________________________________________________________________

மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை வெறியாட்டம்

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மாவோயிஸ்ட்டுகள், மேற்குவங்கம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ஷில்டா என்னும் இடத்தில் தங்கியிருந்த ஈஸ்ட் பிரான்டியர் ரைபிள்ஸ் என்னும் மத்திய பாதுகாப்புப் படையினர் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு தங்கியிருந்த 36 பேரில் 24 பேரைப் படுகொலை செய்துள்ளனர். 7 பேர் கடும் காயங்கள் அடைந்துள்ளனர். மாவோயிஸ்ட்டுகளின் பிரதான நோக்கம், அப்பகுதி மக்களை அச்சுறுத்துவதும், முகாமிலிருந்த ஆயுதங்களைக் கொள்ளையடிப்பதுமாகும். மாவோயிஸ்ட்டுகள் அங்கிருந்த 40 அதிநவீன ஆயுதங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இத்தாக்குதல் சம்பவமானது, அப்பகுதியில் வாரச் சந்தை நடைபெறும் நாளொன்றில், பட்டப்பகலில் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலக் காவல்துறைத் தலைவர், “சம்பவ இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்ததால், பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்குவதில் சிரமம் இருந்தது” என்று இது தொடர்பாகக் கூறியிருக்கிறார். இத்தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனதற்கான காரணங்களைக் கண்டறிய மாநில அரசு ஒரு விசாரணைக்கு ஆணையிட்டிருக்கிறது. இத்தாக்குதலானது, மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை வெறியாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரசு நடவடிக்கைகளை மேலும் வலுவாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. (மேலும்) 26.02.10

__________________________________________________________________________________________________

சரத் கைது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : குழப்பியோரை இனங்காண நீதிமன்றம் உத்தரவு

  ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கல்லெறிந்து களங்கம் விளைவித்த நபர்களை இனங்காண நீதிமன்றம் வசமுள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து கடந்த 10ஆம் திகதி நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்போது அங்கு வந்த அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கல்லெறிந்து குழப்பம் விளைவித்தனர். இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் சம்பா ஜானகி, எதிர்வரும் 25ஆம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். அன்றைய சம்பவம் தொடர்பாக ஐந்து ஊடக நிறுவனங்களிடமிருந்து வீடியோ காட்சிகளைப் பெற்றுள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றில் தெரிவித்தனர்

__________________________________________________________________________________________________

வடக்கில் த.தே. கூ வேட்பு மனுத்தாக்கல்: மட்டக்களப்பு- அம்பாறை வேட்பு மனுத்தாக்கல்கள்

- B.B.C News

இலங்கையின் வடக்கே வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்திருக்கின்றது. அத்துடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியாகிய புளொட் அமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.இராஜ குகனேஸ்வரன் தலைமையிலான சுயேச்சை குழுவும் வவுனியாவில் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன. 90தமிழ் தேசியக் கூட்ட்மைப்பு பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மன்னார் மாவட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகிய எஸ்.சூசைதாசனும் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றார்கள். அதேவேளை, வன்னி மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிவநாதன் கிஷோர், சதாசிவம் கனகரட்ணம் ஆகியோருக்கு இம்முறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்) 25.02.10

__________________________________________________________________________________________________

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்  தோழர் உ.ரா.வரதராசன் மறைவு

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் உ.ரா. வரதராசன் மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 65. அவரது உடல் பிப்ரவரி 23 செவ்வாயன்று காலை 11 மணியளவில் கட்சி யின் மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சித் தோழர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. மாலை 3 மணியள வில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்று கட்சியின் மாநிலக்குழு தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உன்னதமான தலைவர்களில் ஒருவரும், மிகச் சிறந்த போராளியும், சிஐடியு தலைவருமான உ.ரா.வரதராசன் அவர்கள் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். (மேலும்) 25.02.10

__________________________________________________________________________________________________

கனடிய புலிகளின் கோஷ்டி மோதலின் பிரதிபலிப்பே ‘உதயன்’ பத்திரிகை மீதான தாக்குதல்!

கனடா கந்தசாமி

அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகைக் காரியாலயம் தாக்கி சேதமாக்கப்பட்ட செய்தி, கனடிய ஆங்கில ஊடகங்களிலும், உலகம் முழுவதுமுள்ள தமிழ் ஊடகங்களிலும் ஒரு முக்கிய செய்தியாக வெளியாகியிருந்தது. இந்தத் தாக்குதல், ‘இனம் தெரியாத’ ;நபர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் குறிப்பிட்டன. கடந்த காலங்களில், அதாவது மே 18, 2009 ஆணடிற்கு முன்னர், தமிழ் ஊடகங்களில் ‘இனம் தெரியாத’ என்ற சொல்லு புலிகளைக் குறிப்பதற்கே பாவிக்கப்பட்ட ஒன்று என்பது, அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். ஏனெனில் புலிகள் உரிமை கோரமுடியாத சூழ்நிலையில் கடந்த காலத்தில் செய்த கொலைகள் எல்லாவற்றையும், ‘இனம் தெரியாத நபர்களினால் செய்யப்பட்ட கொலைகள்’ என்ற சொற்பதத்தின் மூலமே, தற்பொழுது சந்தேகமற புலி ரவுடிகளால் தாக்குதலுக்குள்ளான கனடிய ‘உதயன்’ முதல் எல்லா தமிழ் ஊடகங்களும் குறிப்பிட்டு வந்துள்ளன. கனடிய உதயன் பத்திரிகை தற்பொழுது தாக்குதலுக்குள்ளானதற்கு, அது அப்படியொன்றும் புலிகளுக்கு எதிரான பத்திரிகை என்பது காரணமல்ல. (மேலும்) 24.02.10

__________________________________________________________________________________________________

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாகப் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு ‘ரிக்கற்’ வழங்காததால் ஒதுங்கியுள்ளனர். தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களில் யாருக்கு ‘ரிக்கற்’ வழங்குவது யாருக்கு வழங்குவதில்லை எனத் தீர்மானிப்பதற்குக் கூட்டமைப்பின் தலைமைக்கு உள்ள உரிமையைக் கேள்விக்கு உட்படுத்தும் நோக்கம் எமக்குச் சிறிதளவேனும் இல்லை. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘ரிக்கற்’ வழங்காததற்குக் கூட்டமைப்புத் தலைமை கூறிய காரணம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவான விடயமாக இருப்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தமிழ்த் தேசியம் பற்றிப் போதுமான அளவு பேசாததாலேயே ‘ரிக்கற்’ மறுக்கப்பட்டதெனக் கூட்டமைப்புத் தலைமை கூறியதெனச் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறினார்கள்.  (மேலும்) 24.02.10

__________________________________________________________________________________________________

தொண்டர் நிறுவனங்களூடாக பணம் கொடுத்து ஜனநாயகத்தை சீர்குலைக்க சில நாடுகள் முயற்சி வருகை தந்த இரு தூதுவர்களிடம் கொழும்பு புகார்

நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்காக சர்வதேச உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களூடாக சில நாடுகள் நிதி வழங்குவதாக வருகை தந்திருக்கும் இரு தூதுவர்களிடம் நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு புகார் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் விசேட தூதுவர் ஜோன் மக்கார்தி மற்றும் சூடான் தூதுவர் கதிர் கரோன் அஹமட் ஆகியோருடனான தனித் தனியான சந்திப்புகளின்போது இந்தக் கவலையை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். அவர் எந்தவொரு நாட்டினதும் பெயரைச் சுட்டிக் குறிப்பிட்டிருக்கவில்லை. ஆயினும், பெப்ரவரி 10 இல் சிங்கப்பூரின் ஸ்ரெய்ட் ரைம்ஸுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அளித்த பேட்டியின் பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையுமென ஊகிக்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் சதிப்புரட்சித் திட்டக் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஸ்ரெய்ட் ரைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கோதாபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். (மேலும்) 24.02.10

__________________________________________________________________________________________________

பொன்சேக்காவின் நிவாரண கோரிக்கை உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை நிபந்தனையுடனோ அல்லது நிபந்தனையின்றியோ விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நேற்று (23) நிராகரித்தது. அடிப்படை மனித உரிமை மீறும் அறிக்கையொன்றை விடுக்குமாறு கேட்டு ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் இருவர் தாக்கல் செய்திருந்த மனுவில் நிவாரணம் வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அம்சங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் இடம்பெறும் விசாரணையின்போது சாட்சியம் வழங்கப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில், விடுதலை செய்யும் நிவாரணத்தை பெற்றுத்தர முடியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதில் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜகத் பாலபட்டபெந்தி மற்றும் கே. ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (23) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சரத் பொன்சேகா கேட்டுள்ள மற்றைய நிவாரணம் ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டினார். (மேலும்) 24.02.10

__________________________________________________________________________________________________

தமிழ் முற்போக்கு - ஜனநாயக சக்திகளின் ஐக்கியத்தை வலியுறுத்திய ரொறன்ரோ கருத்தரங்கு!

கனடாவிலிருந்து எஸ்.சிவபாலன்

பெப்ரவரி 21ம், 2010 அன்று கனடாவின் ஸ்காபரோ நகரில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பங்கு பற்றிய அனைவரும், தமிழ் மக்களின் அரசியலில் கடந்த 60 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற தமிழ் பிற்போக்கு சக்திகளை, குறிப்பாக அவற்றின் தற்போதைய பிரதிநிதியான தமிழ் தேசியக்கூட்டமைப்பை சகல அரங்குகளிலும் தோற்கடிப்பதற்காக, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள இடதுசாரி – ஜனநாயக சக்திகள் ஐக்கியப்பட்டுச் செயற்பட வேண்டும் என்ற கருத்தைப் பலமாக வலியுறுத்தினர். ‘கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம்’ முதன்முதலாக ஏற்பாடு செய்த கருத்தரங்கிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது. இக் கருத்தரங்கிற்கு மூத்த இடதுசாரித் தொழிற்சங்கவாதி எஸ்.தருமராசன் தலைமை வகித்தார். அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தான் வாழும் புலம்nhயர் நாட்டிலிருந்து தாயகம் சென்று, சுமார் நான்கு மாதங்கள் வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு தமிழ் - முஸ்லீம் - சிங்கள அரசியல் தலைவர்களைச் சந்தித்து உரையாடி, பல விடயங்களையும், கண்ணோட்டங்களையும் திரட்டி வந்துள்ள பிரபல ஊடகவியலாளர் எஸ்.மனோரஞ்சன் அவர்களுடான ஒரு சந்திப்பை கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் பலரே மேற்கண்ட அபிப்பிராயங்களை முன் வைத்தனர்.  (மேலும்) 23.02.10

__________________________________________________________________________________________________

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எம். பிக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு  பட்டியலில் இடமில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்களுக்கு அக் கட்சியின் வேட்பாளர்களாகப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்பட வில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் எம். பி. தங்கேஸ்வரி கதிராமன் தெரிவித்தார். தமிழ் தேசியத்திற்காகக் குரல் கொடுத்தவர்களுக்கே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட த. தே. கூ. பட்டியலில் இடமளித்திருப்பதாக முன்னாள் எம். பியான இரா. சம்பந்தன் கூறியுள்ளார். ஆனால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ் தேசியத்திற்காகப் பேசிய எமக்கு த. தே. கூ. வேட்பாளர் பட்டியலில் இடமளிக்காதது ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் கூறினார். தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்திகளுக்குத் தம்மால் பங்களிப்பு செய்ய முடியாமல் போனது. இதனையிட்டு பெரிதும் கவலை அடைகிறேன் எனவும் அவர் கூறினார். (மேலும்) 23.02.10

__________________________________________________________________________________________________

பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்த மேலும் ஆவணங்கள் தேவை: இந்தியா 

  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்கள் தேவை என இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த ஆவணங்கள் தேவைப்படுவதாக மத்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். மரபணு பரிசோதனையின் மூலம் பிரபாகரனின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பிலான இலங்கையின் ஆவணங்கள் இந்திய நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப் போதுமானதாக அமையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்திய ஆவணத்தினை இலங்கை வழங்கியுள்ளதாக சி.பி.ஐ. தமக்குத் தெரிவித்ததாக இந்திய உட்துறை அமைச்சர் இம்மாதம் தெரிவித்திருந்தார்.  எனினும் அவ் ஆவணங்கள் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லாமையால் சி.பி.ஐ. இன் பல்தரப்பு ஒழுக்காற்று கண்காணிப்பு முகவர் மேலும் சில ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு இம்மாதம் இரண்டாவது வாரத்தில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

__________________________________________________________________________________________________

சீனரின் நண்பரான இந்திய மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் (1910 - 1942)

கடந்த 1938-45ம் ஆண்டுகளில் சீனாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது சீன மக்களுக்கு உதவும் வகையில் இளம் மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் (Shantaram Kotnis) பிறந்த ஊரான இந்தியாவை விட்டு சீனாவுக்கு வந்து அவருடைய சிறந்த மருத்துவ சிகிச்சை நுட்பத்தின் மூலம் சீன மக்களுக்கு உதவி வழங்கினார். மிகப் பல சீனர்கள் அவரை நன்றாக அறிந்து கொண்டுள்ளனர். அவருடைய அணுகுமுறை பண்பு நலன் சிகிச்சையளிப்புத் திறன் ஆகியவை சீன மக்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டன. அவரின் உடன்பிறப்புகள் சீனாவிலான அவரது போராட்ட வாழ்க்கைக் கதைகள் பற்றி எப்படி மதிப்பிடுவதை தெரிந்து கொள்வோமா? மும்பை நகரின் தெற்கில் அமைந்த சாதாரண ஒரு மாடி வீட்டில் மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸின் மூன்றாவது தங்கை மனோரமா கோட்னிஸ், ஐந்தாவது தங்கை வத்சலா கோட்னிஸ் இருவரும் வாழ்கின்றனர். அவர்கள் இப்போது மூதாட்டிகள். அப்போது அவர்களது சகோதரர் ஷந்தாராம் கோட்னிஸ் இந்தியாவை விட்டு சீனாவுக்கு சென்ற போது அவர்கள் குழந்தையாக இருந்தனர். (மேலும்) 23.02.10

__________________________________________________________________________________________________

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

.B.B.C News

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவும், செயலாளராக தானும் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே தாம் அதிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியடைந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். (மேலும்) 23.02.10

__________________________________________________________________________________________________

கனேடிய 'உதயன்' பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

 கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக த ரொரண்டோ ஸ்ரார் இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பத்திரிகையின் தலைமை ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக இலங்கை- கனடா வணிக பேரவை மற்றும் கனேடிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் குல செல்லத்துரை தெரிவித்துள்ளார்.. இந்தத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை – கனேடிய வர்த்தகப் பேரவையின் தலைவர் செல்லத்துரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பு குறித்த செய்திகள் அப்பத்திரிகையின் முதற் பக்கத்தில் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையப் பெற்றுள்ளதென செல்லத்துரை குறிப்பிட்டுள்ளார். அமைதியான முறையில் வாழ்வதற்காகவே கனடாவிற்கு வந்ததாகவும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

__________________________________________________________________________________________________

ஜ.தே.கூ.வின் வெற்றிக் கிண்ணத்தில் களம் இறங்குகிறார் சரத் பொன்சேகாசட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஊடாக தீர்மானத்தை அறிவித்தார்.

ஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.தனது தீர்மானத்தை அவரின் சட்டத்தரணியும் முன்னாள் எம்.பி.யுமான விஜேதாச ராஜபக்ஷ மூலம் கட்சிகளின் தலைவர்களுக்கு (எதிரணிக் கட்சிகளின்) அவர் அறிவித்திருக்கிறார். இதனை விஜேதாச ராஜபக்ஷ நேற்று உறுதிப்படுத்தினார்.பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விரைவாகத் தீர்மானம் எடுக்குமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுள்ள நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐ.தே.மு.வில் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதென இந்த முன்னணியிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு என்பன தீர்மானம் எடுத்து வேட்பாளர் பட்டியலையும் 90 சதவீதம் பூர்த்தி செய்திருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் யாவும் ஒரே அணியில் ஒன்று சேர்ந்தது போன்றதொரு ஏற்பாட்டை பொதுத் தேர்தலிலும் மேற்கொள்வது தொடர்பாக துரிதமாக முடிவு எடுக்குமாறு ஐ.தே.க. ஜெனரல் பொன்சேகாவிடம் கேட்டிருப்பதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்று ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தது. (மேலும்) 23.02.10

__________________________________________________________________________________________________

2/3 பெற்று அரசியலமைப்பு மாற்றம்: வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பாரிய அபிவிருத்தி

rajapaksha le-ficaroபொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியல மைப்பை மாற்றுவதுடன் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தியை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இம்முறை அமைச்சரவையை சிறியதாக்கும் அதேவேளை, இளைஞர்களுக்கு முன்னுரிமையளிப்பதும் தமது எதிர்பார்ப்பாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்நாட்டில் அரசியல் செய்ய எவருக்கும் உரிமையுண்டு. தனிப்பட்டவர்களைப் பாதிப்படையச் செய்ய நாம் தயாரில்லை. அவ்வாறு அரசியல் நடத்தவும் முடியாது. எவரும் அரசியல் நடத்தும் சுதந்திரம் இந்நாட்டில் உள்ளது என்பதை மக்கள் அறிவர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மலையக மக்கள் வெள்ளையர்களின் ஏகாதிபத்திய போராட்டத்திற்கு முகங்கொடுத்தவர்கள். அவர்களின் தாக்குதல்களில் பலியானார்கள். அத்தகையவர்களைக் கொன்று குவிக்கும் அளவிற்கு வெள்ளை ஏகாதிபத்தியம் கொடூரமானதாகத் திகழ்ந்தது. அந்த வகையில் ஊவா மக்கள் உறுதியானவர்கள். டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார போன்றவர்கள் தாம் பதவி வகித்த கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்கள். ஒரு பாராளுமன்ற சபாநாயகரைக் கூட எம்மால் நியமிக்க முடியாத நிலையில் சபாநாயகராக நியமனம் பெற்றவர் அவர். இம்முறை இளையோர் பலர் எம்முடன் உள்ளனர். கடந்த முறை மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாம் பெற 19 ஆசனங்கள் எமக்குக் குறைவாக இருந்தன. இம்முறை அதனை நாம் பெற்று மூன்றிலிரண்டு பெரும் பான்மையை நாம் பெற்றுக்கொள்வது மிக உறுதி. (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

ஐ.ம.சு.மு வேட்பாளர் பட்டியல்கள் இன்று முதல் கையளிக்க ஏற்பாடு

    * முதல் பட்டியல் கம்பஹாவில் இன்று தாக்கல்

    * மு.கா.இன்று முடிவு

    * ரி.எம்.வி.பி வடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டி

பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல்கள் இன்று (22) முதல் கட்சி முதன்மை வேட்பாளர்களினால் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியல் ஐ.ம.சு முன்னணி கம்பஹா மாவட்டக் குழுத் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட உள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் தினங்களில் குழுத் தலைவர்களினால் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார். கம்பஹா மாவட்ட வேட்பு மனுத்தாக்கலைத் தொடர்ந்து ஐ.ம.சு. முன்னணியின் முதலாவது கூட்டம் அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கம்பஹா நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வுதான் தீர்வு அதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்- திமுக

 இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வு ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு என்றும் அதற்கான அரசியல் தீர்வு காண முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலேயே இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு: இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும், மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே உறுதி அளித்தபடி இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதால், அதற்கான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும். (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

தொழிலாளர்களின் நலன்களில் அதிக அக்கறை வேண்டும்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் ஒரு முக்கிய படிப்பினையை நமக்கு ஊட்டியுள்ளது. அதன்படி இன்னும் வரும் ஏழாண்டு களுக்கு இதே ஜனாதிபதியின் கீழ்தான் ஆட்சியமைய போகிறது. ஆகவே நாம் ஆளுங்கட்சியின் கரங்களை உயர்த்துவதே இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் கடமையாகும். நடைபெற்ற தேர்தலில் மலையகச் சமூகம் அதிலும் குறிப்பாக தமிழ் சமூகம் வாக்களிக்கவில்லையென காரணங்காட்டி சில அரச காரியாலயங்களில் உதாசீனப்படுத்தப்படுவதை அனுபவ ரீதியாக அறிய முடிந்தது. ஆதலால் நாம் அவதானமாக செயற்பட வேண்டும். பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் பெருந்தொகையானோர் நம்மவர்கள் ஆசிரியர்களாகவும் அரச ஊழியர்களாகவும் உள்வாங்கப் பட்டதோடு, தபால் விநியோகம், வீதி புனரமைப்பு, வீடமைப்புகளும் ஓரளவாது முன்னெடுக்கப்படுகின்றன. எனவே நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் இவைபற்றி சிந்தித்து மலையகத்தின் அபிவிருத்திக்கான வழிமுறைகளை காண வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழர் கூட்டணி எதிரணியில் இருந்து எதிர்வாதம் புரிய முடிந்தளவிற்கு அம்மாகாண அபிவிருத்தியை செய்ய முடியவில்லை. அதேவேளை அங்கிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் அரசின் பணிகளோடு இணைந்து போனதால் பல்வேறு வாய்ப்பு வசதிகளை நமது சமூகத்திற்கு பெற்றுக்கொடுக்க முடிந்தது. எனவே எதிர்வரும் தேர்தலில் நாம் எதிர்காலம் பற்றிய சிந்தனையோடு வாக்களிப்பதோடு நமது சார்பாக போட்டியிடும் சரியானவர்களை இனங்கண்டு தெரிவு செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். நமக்குத் தேவை சமூகத்தின் சுதந்திரமான சுபீட்சமே! (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

தமிழ் மக்களுடைய பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக செயற்படக்கூடிய ஒரு நிலைமை உருவாக்கப்படவேண்டும்.

- த.சித்தார்த்தன்  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)

தேர்தல் சம்பந்தமாக தமிழ்க் கட்சிகளிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் பல தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இருந்தாலும் இந்த கூட்டுச் சம்பந்தமான பேச்சுக்களை அடிப்படையிலேயே தேர்தலை நோக்கியதாகவே அனைத்துக் கட்சிகளும் பார்க்கின்றன. தத்தமது கட்சிக்கு கூடுதலான வேட்பாளர் பங்கீடு மற்றும் தத்தமது கட்சியின் வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையிலான கூட்டுக்கள் அமைவதிலுமே அனைத்துக் கட்சிகளும் முனைப்புக் காட்டி வருகின்றன. அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கூறி வருகின்றபோதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த கூட்டமைப்பு முயற்சிகள் நடைபெறவில்லை. இருந்தாலும் தமிழ் கட்சிகள் கூடியளவுக்கு ஒன்றுபட்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதையே நாங்களும் முழுமையாக விரும்புகிறோம்.  இதனடிப்படையில் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றோம். ஆனால் எப்படியிருந்தபோதிலும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக தேர்தலுக்கு முகம்கொடுக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே காணப்படுகின்றது. (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

காதோடு காதாக

ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கதரிசனமின்மையால் தப்புக்கணக்கு போட்டுவிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுத் தேர்தலில் தமது சாணக்கியத்தை உரசிப்பார்க்க முயன்று வருகிறார்கள் போல் தெரிகிறது. அந்தவகையில் முஸ்லிம் மக்களின் அபிமானத் தலைவரென்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியின் தலைவர், நாட்டின் அதிமுக்கிய பிரமுகருக்குத் தொலைபேசி அழைப்பொன்றை எடுத்துள்ளார்.
‘உங்களைச் சந்திக்க வேண்டும்’....

‘ஏன் என்ன விடயத்துக்காகச் சந்திக்க வேண்டும்?’....

‘எனது பாதுகாப்பு விடயமாகச் சந்தித்துப் பேசவேண்டும்’...

  ‘இப்பொழுதுதான் பாதுகாப்பு பிரச்சினை இல்லையே. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. நீங்களும் விரும்பிய இடமெல்லாம் சென்றுவருகிaர்கள், உங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் பேசுகிaர்கள். ஆகவே, பாதுகாப்பு தொடர்பாகப் பேசுவதில் அர்த்தமில்லை என நினைக்கிறேன்’... என்று அவரது செயற்பாட்டைப் புரிந்துகொண்டவராய் அதிமுக்கிய பிரமுகர் பதில் அளித்துள்ளார். ஆனால், அந்தத் தானைத் தலைவர் விட்டபாடில்லை!
‘இல்லை, இல்லை... நான் உங்களைச் சந்தித்துச் சில விடயங்கள் பற்றிப் பேச வேண்டும்!’

 ‘இப்படித்தான் சொல்லிவிட்டு வருவீர்கள். பின் வெளியில் சென்று என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் அவதூறாகப் பேசுவீர்கள்’.... இதற்கெல்லாம் நேரமில்லை...’ என்று கனத்த குரலில் கூறிவிட்டுத் தொலைபேசியைத் துண்டித்தாராம் அதி முக்கிய பிரமுகர்.

__________________________________________________________________________________________________

தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமான தேர்தல்

நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தீர்மானகரமானது என்றும் சவாலை உணர்ந்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்து ஊடகங்களில் வெளியாகியிருந்தது. உண்மையிலேயே இப்பொதுத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கை சுதந்திரமடைந்து அறுபத்திரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. தமிழ் மக்களின் இருப்பு தொடர்பானதும் அவர்களின் தனித்துவ அங்கீகாரம் தொடர்பானதுமான பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை தமிழ் மக்களின் அரசியல் தலைமை குறிப்பிட்ட ஒரு அரசியல் செல்வழியைச் சார்ந்ததாகவே இருந்து வருகின்றது. தலைசிறந்த மூளைசாலிகள் எனக் கருதப்பட்டவர்கள் இக் காலப் பகுதியில் அத் தலைமைப் பீடத்தை அலங்கரித்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை. சரியாகக் கூறுவதானால், பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்தே வந்திருக்கின்றது.   (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்க 8000 உள்நாட்டுக் கண்காணிப்பாளர்கள்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்க 8000 உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் சகல மாவட்டங்களுக்கும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படவுள்ளனர். உள்நாட்டு கண்காணிப்பாளர்குளில் 1500 பேர் சுயாதீனமாக இயங்கக் கூடியதாகவும் பொதுவான கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர். கண்காணிப்பாளர்களை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் பவ்ரல் அமைப்பு ஈடுபட்டிருப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 

__________________________________________________________________________________________________

தேர்தல் வேட்புமனு தாக்கல்

- தாயகக்குரல்

19ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்யமுடியும்.   தேர்தல் களத்தில் இறங்குவற்கு அரசியல் கட்சிகள் தயாராகி தமது வேற்றி வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த பொதுத்தேர்தலில் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் மூலம் 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். அதாவது நாடு முழுவதும் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவர். வடக்கில்; யாழ்ப்பாணத்தில் இருந்து - 9 உறுப்பினர்கள், வன்னியில் - 6 உறுப்பினர்கள், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை - 4 உறுப்பினர்கள், மட்டக்களப்பு - 5 உறுப்பினர்கள், திகாமடுல்ல - 7 உறுப்பினர்கள் என மொத்தம் 31 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். கிழக்கில் மூவின மக்கள் தொகை  விகிதாசாரத்தில் அதிக வித்தியாசம் இல்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் இரு அணிகளிடையேதான் தீவிர போட்டி காணப்பட்டன. ஆனால் இந்த அணிகளில் உள்ள கட்சிகள் பொது தேர்தலில் தமது தனித்துவத்தை பேண தனியாக போட்டியிடலாம் எனத் தெரிகிறது. பொதுத் தேர்தலில் பல்வேறு கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுவது மாத்திரமல்ல தனித்தனிக் கட்சிகள் உள்ளே விருப்பு வாக்கை பெறுவதில் வேட்பாளர் மத்தியில் கடுமையான போட்டி காணப்படும். (மேலும்) 21.02.10

__________________________________________________________________________________________________

கட்சிகளின் அங்கீகாரம் பற்றிய மீளாய்வு வேண்டும்

இலங்கையில் எத்தனையோ அரசியல் கட்சிகள் களத்துக்கு வந்து போய்விட்டன. சில கட்சிகள் வந்த சுவடே தெரியாமல் மறைந்துவிட்டன. தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் உள்ளவற்றிலும் பெரும்பாலானவை பெயரளவில் மாத்திரம் உள்ளவை. இக் கட்சிகள் இடைக்கிடை சின்னத்தை யாருக்காவது இரவல் கொடுப்பதைத் தவிர வேறெந்த செயற்பாட்டிலும் ஈடுபடுவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் சில கட்சிகள் மாத்திரமே தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அரசியல் அரங்கிலிருந்து மறைந்து போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு தோன்றியதால் ஆரம்பிக்கப்படும் கட்சிகளில் பெரும் பாலானவை நீடிப்பதில்லை. சுயலாப நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் தீவிரமான அரசியலில் ஈடுபடுவதில்லை. தெளிவானதும் நிலையானதுமான கொள்கை இல்லாமல் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் கட்சிகள் காலப்போக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்டுவிடுகின்றன. (மேலும்) 21.02.10

__________________________________________________________________________________________________

தனிவழி போகும் தன் திட்டத்தை கைவிட்டது தமிழ்க் காங்கிரஸ் ஆனால் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புடன் முரண்பாடு

தனி வழி போகும் தனது திட்டத்தை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கைவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து இந்தப் பொதுத் தேர்தலையும் சந்திப்பதற்கு அக்கட்சி முடிவு செய்தமையை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவிய குழப்பம் ஓரளவு முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தமிழ்க்காங்கிரஸ் கட்சி தனது சார்பில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் குறித்து முன்னுக்குப் பின் முரணான விதத்தில் பெயர்களை மாற்றியதால் கூட்டமைப் புக்கும் அக்கட்சிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை செயலாளராகக்கொண்ட அகில இலங் கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைமையோடு முண்டிக்கொண்டிருந்தமையை அடுத்து, எதிர்வரும் தேர்தலில் அக் கட்சி கூட்டமைப்பை விட்டுத் தனி வழி போகக்கூடும் எனப் பரவலாகப்  பேச்சடிபட்டது தெரிந்ததே. இவ்விவகாரம் தொடர்பாக  அக்கட்சிக் கும் கூட்டமைப்புக்கும் இடையில் இடம் பெற்ற பல சுற்றுப் பேச்சுகள் ஆரம்பத்தில் இழுபறியாக நீடித்தபோதிலும் நேற்று முன் தினம் இரவு கடைசியாகப் பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. (மேலும்) 21.02.10

__________________________________________________________________________________________________

India is my relation, the others are friends'

Mahinda Rajapaksa, a powerful and popular head of government and state, has the way cleared for him for the next six years and more. In a recent conversation with N. Ram lasting three-and-a-half hours at Temple Trees in Colombo, he covered, and answered questions on, a range of subjects. Excerpts from his on-the-record comments and responses: I was not surprised [by the margin of victory, nearly 18 percentage points]. Because in the Provincial Councils, if you count the majority, it was 2.5 million. I knew that if you took 1 million out of that, I would have won with 1.5 million. And I knew what the pulse of the people in villages was. Even in Colombo district, outside the municipal area, they gave me a good majority. I knew from the start that my majority would be there. And I am not surprised about the North-East results. I was encouraged by that. I had the election, I knew that people must vote, they must be given a chance to elect their own President. Twenty-six per cent, I am satisfied with it. In every village, I got some votes, didn't I? (Read) 21.02.10

__________________________________________________________________________________________________

உலக மக்கள் ஒன்றுகூடுவோம்!

- தே. லட்சுமணன்

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் புவிசுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் துறையின் முனைவர் டாக்டர் கிரிக் ஆங்ஸ்மித் என்பவர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் 19.1.2010 அன்று உரையாற்றிய போது சில அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளார். அந்த உரையில் உலக சுகாதார அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பை மேற்கோள் காட்டியுள்ளார். வளரும் நாடுகளில் சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் ஏற்படும் நுரையீரல் நோயினால் ஓர் ஆண்டுக்கு 9.50 லட்சம் குழந்தைகளும், 6.50 லட்சம் தாய்மார்களும் அகால மரணம் அடைகிறார்கள். இதற்குக் காரணம் “கார்பன்” புகையை அதிகமாக உட்கொள்ளுகிறார்கள். பருவநிலை நமக்கு எதிராக மாறி வரும் சூழலில், சமையல் செய்யப் பயன்படுத்தும் “ஸ்டவ்” உமிழும் கார்பனும் தாய்மார்களையும், குழந்தைகளையும் சுகாதார ரீதியாக பாழ்படுத்துகிறது. இதுவே அவர்களின் ஆயுளைக் குறைத்து, மரணப்படுக்கையில் கிடத்திவிடுகிறது என்கிறார்.  (மேலும்) 21.02.10

__________________________________________________________________________________________________

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!

வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

ஏப்ரல் 08ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறப் போவதையொட்டி, நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதற்குக் காரணமில்லாமல் இல்லை. இலங்கையைப் பொறுத்தவரையில், ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டால், அவரது வாழ்க்கை பூலோக சொர்க்கமாகி விடுவதே அதன் காரணமாகும். அதற்காக ‘நாட்டைக் காப்பேன், இனத்தைக் காப்பேன், மொழியைக் காப்பேன், மதத்தைக் காப்பேன்’ என, பல்வேறு நாடகங்களை அரசியல் கட்சிகள் அரங்கேற்ற ஆரம்பித்து விடும். அதிலும் இந்த விடயத்தில் நமது (இலங்கை - இந்திய) தமிழ் அரசியல் கட்சிகளின் வீர சாகசங்களோ, சாதனைகளோ கணக்கிலடங்காதவை.  அந்த ‘வீர வரலாற்றின்’ தொடர்ச்சியாக, மீண்டுமொரு முறை ‘வரலாற்றுத் திருப்பமுள்ள’ தீர்ப்பை, இலங்கை பொதுத்தேர்தலில் தமக்கு வழங்கும் படி, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். அவர் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களைப் பார்த்துத் துணிச்சலுடன் இப்படிக் கேட்டதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இலங்கை 1948ல் அந்நியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல், தமிழர்களுக்கு தலைமை தாங்கிய அனைத்துத் தலைமைகளும் - அதாவது தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு (இது பாசிசப் புலிகள் உருவாக்கிய பினாமி அமைப்பு) என அனைத்துக் கட்சிகளுமே, தமிழ் மக்களிடம் இவ்வாறு கேட்டு பாராளுமன்றம் சென்று, தமது சொந்த நலன்களையே பார்த்து வந்துள்ளதின் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியே சம்பந்தனின் தற்போதைய வேண்டுகோளுமாகும். இந்த சுயநல அரசியலையே தமிழ் தேசியவாதிகள் சிலர், ‘தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு’ என்றும் வர்ணித்துக் கொள்கின்றனர். (மேலும்) 19.02.10

__________________________________________________________________________________________________

தவறான பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பாராளுமன்றத் தேர்தலுக்காகக் கூட்டணி அமைப்பதில் எதிரணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. இக்கட்சிகளுக்கிடையே கொள்கை உடன்பாடு எதுவும் இல்லை. கலாசார, பொருளாதார, சர்வதேச விடயங்களிலும் சமூக நோக்கிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இந்த உத்தேச கூட்டணியில் பிரதான கட்சிகளாக உள்ளன.  பொதுவான வேலைத் திட்டம் பற்றிய அக்கறை இவர்களுக்கு இல்லை. பொதுவான சின்னம் பற்றியே பேச்சுவார்த்தை நடத்துகின்றார்கள். பாராளுமன்ற ஆசனங்களைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத கூட்டணி என்று இதைக் கூறலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கூட்டணியுடன் தன்னை இனங்காட்டுவது இக் கூட்டமைப்பின் உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றது  (மேலும்) 19.02.10

__________________________________________________________________________________________________

தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னரே பெருந்தொகைப் பணம் பெட்டகத்தில் வைப்பு. பொன்சேகாவின் பணமென அசோகா திலகரட்ன தகவல்

* நகை வைக்கும் பெட்டகத்தில் பணம் வைக்கப்பட்டது ஏன்?

* 2000 டொலர்களை மாத்திரமே நம்முடன் வைத்திருக்க முடியும்

* ஆர்ப்பாட்டம் நடத்துவதால் சட்டத்திலிருந்து தப்ப முடியாது?

தேர்தல் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே சரத் பொன்சேகா பெருந்தொகைப் பணத்தை வங்கியின் பெட்டகத்தில் வைத்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். சரத் பொன்சேகாவின் புதல்வி அப்சரா பொன்சேகா கூறியதற்கிணங்க, பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே அந்தப் பணத்தைக் கொண்டு பெட்டகத்தில் வைத்ததாக ஜெனரல் பொன்சேகாவின் மருமகனின் தாயாரான அசோகா திலகரட்ன கூறியுள்ளார். அவை தன்னுடைய பணம் அல்லவென்றும் அவர் கூறியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பீரிஸ், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். (மேலும்) 19.02.10

__________________________________________________________________________________________________

ஜெனரல் பொன்சேகா விவகாரமும் மகா சங்கமும்

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் கைது செய்யாமல் விட்டிருந்தால் அவரைப் பற்றி நாட்டு மக்கள் பெருமளவுக்குப் பேசாமல் இருந்திருக்கக்கூடும். ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை அவர் ஆக்கிரமிப்புச் செய்வதற்கு வாய்ப்பும் இருந்திருக்காது. அத்துடன் அவரைப் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்திய எதிரணிக் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டங்களைச் செய்வதற்கு ஆரவாரமான ஒரு கோஷம் கிடைக்காமல் போயிருக்கவும் கூடும். அரசாங்கம் ஜெனரல் பொன்சேகா விவகாரத்தைக் கையாளுகின்ற முறை அரசியல் ரீதியில் நோக்குகையில் விவேகமுடையதாக இல்லை என்பதே பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளரான ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலக பொன்சேகா விவகாரத்தை "பூரணமான பெருந்தவறு  என்று வர்ணித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எதிரணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உத்வேகமுடையவையாக இல்லை. மக்களை அணிதிரட்டுவதில் இந்தக் கட்சிகளுக்கு இருக்கின்ற இயலாமையைத் தெளிவாகவே காணமுடிகிறது. (மேலும்) 19.02.10

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?